ம.ம.க உள்ளிட்ட 42 கட்சிகளின் பதிவு ரத்து web
தமிழ்நாடு

ம.ம.க உள்ளிட்ட 42 கட்சிகளின் பதிவு ரத்து.. இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 42 கட்சிகளின் பதிவை ரத்துசெய்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Rishan Vengai

6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத மற்றும் செலவு கணக்கு தாக்கல் செய்யாத காரணத்தால், இந்திய தேர்தல் ஆணையம் 474 கட்சிகளின் பதிவை ரத்து செய்தது.

தேர்தல் ஆணையத்தின் பதிவு பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தடையை நீக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாதது மற்றும் செலவு கணக்கு தாக்கல் செய்யாத காரணத்தால், தமிழகத்தின் 42 கட்சிகள் உட்பட நாடு முழுவதும் 474 கட்சிகளின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

இதை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா அமர்வு, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. வழக்கின் அடுத்த கட்டவிசாரணை மார்ச் இரண்டாம் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.