தொடர்ந்து ஃபைட் பண்ணுங்கண்ணா என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
பாஜக நிர்வாகி காயத்ரி தேவி மகள் திருமண விழாவின் சீமான், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த திருமண விழாவின் போது காரில் புறப்பட்ட சீமானை பார்த்த அண்ணாமலை கை குலுக்கி நலம் விசாரித்தார். அப்போது தொடர்ந்து போராடுங்கள், தைரியமுடன் இருங்கள் என அண்ணாமலை, சீமானை பார்த்து கூறினார். சில விநாடிகள் நடைபெற்ற இந்த சந்திப்பு பேசுபெருளாக மாறியுள்ளது.