பொங்கலுக்கு வெளியாகும் படங்களை சென்சார் போர்டு மூலம் பாஜக அரசு நிறுத்த முயல்கிறது என தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், அந்த வீடியோவில் அவர் பேசும்போது, “ பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் ஆணவப் போக்கு தொடர்கிறது. தமிழ் சினிமாவில், பொங்கலையொட்டி வெளியாகவுள்ள மிக முக்கியமான இரண்டு படங்கள் நிறுத்துவதற்கு முயல்கிறார்கள்.
சி.பி.ஐ, வருமானவரித் துறை மற்றும் அமலாக்கத்துறையை பாஜகவினர் எப்படி பாஜகவினர் பயன்படுத்தி வருகிறார்களோ, அதேபோலவே சென்சார் போர்டையும் பயன்படுத்துகிறார்கள். இதை தமிழ்நாடு எதிர்த்து நிற்க வேண்டும். கட்சி வேறுபாடு பார்க்காமல் நடிகர் வேறுபாடு பார்க்காமல் இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியாகும் முக்கியமான படங்கள். இவ்வாறு, அமித்ஷா தமிழ்நாடு அரசியலை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார். பாஜகவின் இந்த செயலை எதிர்த்து நிற்க வேண்டும்; குரல் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு தமிழரும் பாஜகவை வேரோடு அழிக்க வேண்டும்.
கலையையும் தமிழையும் பிரிக்க முடியாது. கலையை இவர்கள் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்கள்; இது தோல்வியில் தான் முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தசூழலில் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தணிக்கை வாரியம் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் சூழலில், பராசக்தி படத்திற்கு யு/ஏ 16+ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை வாரியம்