ஆ.ராசா
ஆ.ராசா முகநூல்
தமிழ்நாடு

"ஆ.ராசாவின் தேர்தல் செலவின கணக்குகளை குறைத்து காட்ட சொல்கிறார்”- மாவட்ட தேர்தல் அலுவலர் மீது புகார்!

PT WEB

நீலகிரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் தேர்தல் செலவின கணக்குகளை குறைத்து காட்டும்படி மாவட்ட தேர்தல் அலுவலர் கூறுவதாக, உதவி செலவின பார்வையாளர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் அனுப்பியுள்ளார்.

திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான ஆ. ராசா, பாரதிய ஜனதா சார்பில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் போட்டியிடும் நட்சத்திர தொகுதியாக இருக்கிறது நீலகிரி மக்களவை தொகுதி.

ஆ. ராசா - பி.சரவணன்

இந்த தொகுதியில் உதவி செலவின பார்வையாளரும், துணை கருவூல அலுவலருமான பி.சரவணன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தம்முடைய புகார் மனு குறித்து நமது செய்தியாளரிடம் பேசிய சரவணன், ” திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் செலவு கணக்கு பல லட்சம் ரூபாய் வித்தியாசத்தில் இருக்கிறது. ஒரு வேட்பாளர் 95 லட்சம் ரூபாய் வரை செலவினங்கள் செய்யலாம். ஆ.ராசாவின் செலவினங்கள் அதிகரித்து வருவதை குறைத்துக் காட்டும்படி, மாவட்ட தேர்தல் அலுவலர் கூறுயுள்ளார். ஆகவே, இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளேன்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.