Actor Karthickpt desk
தமிழ்நாடு
மக்களவைத் தேர்தல் 2024: இந்தியில் பேசி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்
ஆண்டிபட்டியில் அதிமுகவிற்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட நடிகர் கார்த்திக் இந்தி மொழியில் பேசி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
செய்தியாளர்: மலைச்சாமி
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக், தேனி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமியை ஆதரித்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் நேற்று பரப்புரை மேற்கொண்டார். அவரை பார்க்க கட்சித் தொண்டர்கள் நிர்வாகிகள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் கூடியிருந்தனர்.
Actor Karthickpt desk
இந்நிலையில், அங்கு வந்த நடிகர் கார்த்திக், “எனக்கு இந்தி மொழி தெரியும். இந்தியில் பேசவா?” என்று கேட்டு, இந்தியில் பேசினார்.
அப்போது கீழே நின்றிருந்த நபர், இந்தி மொழியில் நடிகர் கார்த்திக்குடன் உரையாடிய நிலையில், அவருடன் இந்தியில் பேசிய கார்த்திக், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.