commissioner of police x page
தமிழ்நாடு

நாளை புத்தாண்டுக் கொண்டாட்டம்.. கட்டுப்பாடுகள் விதித்த சென்னை மாநகர காவல் துறை!

சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ளது.

PT WEB

சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ளது.

சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ளது. புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது கடற்கரை, வழிபாட்டுத் தலங்கள், சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 19 ஆயிரம் காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊர்க்காவல் படையினர் 1.500 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, இன்று இரவு 9 மணியில் இருந்து சென்னையில் 425 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ள குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகன பந்தயத்தைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மெரினா கடற்கரை

இன்று மாலை முதல் புத்தாண்டு தினம் வரை பொதுமக்கள் கடற்கரைகளில் குளிக்கவோ, இறங்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிக்க தடைவிதிக்கப்படுவதாக சென்னை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மது அருந்த அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு குழந்தைகளைக் கொண்டுசெல்ல அனுமதி இல்லை எனவும், அடுக்குமாடி குடியிருப்புகளில் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் உரிய அனுமதிபெற வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.