தமிழ்நாடு

`முதலில் அரசு சுய ஒழுக்கத்தை பரிசோதனை செய்யட்டும்!’- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

நிவேதா ஜெகராஜா

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மே 11-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘ஒழுக்க விதிகளை மீறும் மாணவர்கள் சான்றிதழில் 'ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டீர்கள்' எனக் குறிப்பிடப்படும் என்ற பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு... அவசியமானதா? அதீதமா?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.

இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.

தவறான நடவடிக்கை. அரசு இயந்திரம் சரியாக ஒழுக்கமாக நேர்மையான ஜனநாயக ரீதியான நடவடிக்கைகள் செயல்பாடுகள் இருக்கிறதா??? முதலில் உங்களின் சுய ஒழுக்கத்தை சுயபரிசோதனை செய்து விட்டு மாணவர்களின் மீது பிறகு நடவடிக்கை எடுக்கலாம்.

அவர்கள் ஒழுங்கீனமாக இருப்பவர் என சான்றிதழில் குறிப்பிடும் பட்சத்தில் அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி ஆகும் அதே நேரத்தில் அவர்கள் தவறான பாதையில் செல்ல வழி வகை செய்யலாம்... மேலும் அவர்களுக்கு ஒளி ஒலி அல்லது சரியான மனநல ஆலோசனை மூலம் இவ்வாறு ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் ஒரு தனி மனிதர் அல்லது சமூகம் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை புரிய வைக்கலாம்.... மேலும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தாலும் அது தவறு எனவே அவர்களை மீண்டும் அதே வகுப்பில் மீண்டும் ஒரு வருடம் இருக்க வைக்கலாம்…

குடத்தை ஓட்டையாக வைத்துக்கொண்டு நீரின் மீது குறைபடுவது போலுள்ளது. போதுமான ஆசிரியர்கள், தற்கால மாணவர் மாண்பு பெருக பாடதிட்டம், பழமைவாத கருத்துகளை தாங்கி நிற்கிற ஆசிரியர்கள் என இத்தனை இடர்களைக் களைவதே சாலச் சிறந்தது. மதி பெருக விதி செய்யவும். ஒழுக்கக்கேடு என எவ்வகை அடையாளங்களைக் கொண்டு அளவீட இயலும்

அவசியமானதுதான் அதேநேரத்தில் பழிவாங்கும் உணர்வோடு பதிவிடாமல் நேர்மையாக குற்றம் செய்தவர் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும்..!! அதுவும் இருமுறை வாய்ப்பு கொடுக்கப்பட்டு திருந்தவில்லை என்றால் கட்டாயம் கரும்புள்ளி தேவை.

அவசியமானதே. ஆசிரியர்கள் அடிக்க கூடாது என்று வாதிடுபவன் நான். அதே சமயம், மாணவர்கள் தங்களது நடத்தையின் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் விழைகிறேன். Checks and Balances.

தேவை இல்லாத ஒன்னு . மாணவர்கள் ஏன் பயப்படனும். எல்லாரும் பயந்தா பயமில்லாத சமூகத்த யாரு உருவாக்குது யார்? வீட்டிலே அமர்ந்து கொண்டு பசங்க வாழ்க்கைய நெனச்சு பயந்து படிக்கணும் . படிப்ப புரிஞ்சி படிக்கணும் . ஆசிரியர் மாணவர்களுக்கு நண்பர்களாக இருக்கணும் எதிரியா இருக்க கூடாது. முதல்ல உங்க பசங்கள நம்புங்க . இன்னொரு நாள் ஆசிரியர் ஒரு மானவிய பாலியல் வன்கொடுமை செய்ய நெனச்சு இத வச்சு மிரட்டினால் உங்க யார் வந்து அந்த பொன்ன யார் வந்து காப்பாத்துவது . மாதா , பிதா , குரு ,தெய்வம் யாரோ சொன்னது வச்சு நீங்க ஏங்க ரிஸ்க் எடுகரிங்க. நமக்கு அனுபவமே நல்ல அசான் . வாழ்க்கைல சந்திக்கர ஒவ்வொரு நபரும் ஏதாவது வகைல நமக்கு பாடம் சொல்லி கொடுக்கறாங்க. மாணவர்கள் மனுசங்க நீங்க நெனைச்ச ரோபோ கிடையாது. எல்லா ஆசிரியர்களும் அப்படி இல்ல . ஆனா ஒரு சிலரும் அப்டி இருகாரங்க . அந்த ஒரு சிலர் வசதியா இருக்க கூடாது.