சென்னை தாம்பரத்தில் கல்லூரி மாணவி ஒருவருக்கு வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்தநிலையில், அக்குழந்தையை தொப்புள் கொடியுடன் குப்பைத் தொட்டியில் தூக்கி எரிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை மாடம்பாக்கத்திலுள்ள பாலாஜி நகர் பிரதான சாலையில் பச்சிளம் குழந்தையின் அழுகும் சத்தம் கேட்டுள்ளது. குப்பை கிடங்கிலிருந்து சத்தம் வருவதை கேட்ட அருகிலிருந்த மக்கள், உடனடியாக குப்பை தொட்டியை சென்று பார்த்தபோது, உள்ளே தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் பச்சிளம் குழந்தை ஒன்று எறும்பு கடியால் கதறி அழுதுகொண்டதை கண்டனர்.
இதன்பிறகு , குழந்தையை மீட்ட மக்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டநிலையில், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பிவைக்கப்பட்டது.
குழந்தையை குப்பை தொட்டியில் வீசியது யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளில் சில காட்சிகள் பதிவாகியுள்ளனர்.
அதில், குழந்தை கிடைப்பெற்ற நேரத்திலிருந்து சுமார் 6 மணி நேரத்திற்கு முன்பு சுமார் 20 வயதுடைய பெண் ஒருவர், குழந்தையை குப்பை கிடங்கில் போட்டது பதிவாகியுள்ளது. குற்றத்தை புரிந்த பெண், தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பிடெக் படிப்பவர் என்பது தெரியவந்தது.
மாணவிக்கு அவரது தாயார் வீட்டிலேயே பிரசவமும் பார்த்துள்ளனர். இந்நிலையில், மாணவி தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தை, குழந்தைகள் நல மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளது.
குப்பையில் வீசப்பட்ட குழந்தையும், வீட்டிலேயே தாய் பிரசவம் பார்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.