தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாபுதிய தலைமுறை

தொடங்கிய விஜய்... மறுத்த பிரசாந்த் கிஷோர் ! என்ன நடந்தது?

விழாவில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய விஜய், மறுத்த பிரசாந்த் கிஷோர்..
Published on

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா தொடங்கியுள்ளது. தவெக தலைவர் விஜய் உடன் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனத் தலைவரும் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரஷாந்த் கிஷோர், தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலா​ளராக ஆதவ் அர்ஜுனா​ ,பொது செயலாளர் என்.ஆனந்த் ஆகியோரும் மேடையில் இடம்பெற்றுள்ளனர்.

கிடாக்குழி மாரியம்மாள் ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடல் புகழ் கிடாக்குழி மாரியம்மாள் பாடல் பாட விழா இனிதே தொடங்கியது.

இதற்கு முன்பாக, விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக, "வாக்கு வங்கிக்காக சாதி, சீர்கேடுகளை எதிர்க்க அஞ்சும் நயவஞ்சகர்களுக்கு #GetOut" என மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது.

பேனரில் 6 விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

அதில், "ஒருவர் பாட்டுப்பாட, மற்றொருவர் ஒத்திசையுடன் நடனமாட திரைமறைவு கூட்டு களவாணிகள் இருவரும் தமிழக மக்களின் பிரச்சனைகளை இருட்டடிப்பு செய்ய என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்கின்றனர். புதிய கல்விக் கொள்கை, மும்மொழி திட்ட திணிப்போடு சேர்த்து முக்கிய அவலங்களையும் எதிர்த்துப் போராடி இவைகளை #GETOUT செய்திட உறுதியேற்போம்." என்று பல விஷயங்கள் அச்சிடப்பட்டிருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா
விஜயை சந்தித்த தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்!

இந்த பேனரில்தான், முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை விஜய் தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் ஆனந்த் கையெழுத்திட்டார். அதன்பின் பிரசாந்த் கிஷோரிடம் கையெழுத்திட கேட்கப்பட்டது. ஆனால், பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுத்துவிட்டார். முன்னதாக, அந்தக் கையெழுத்து இயக்கம் குறித்து பிரசாந்த் கிஷோருக்கு ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்தார். அதன்பின்னும் ஆனந்த் கையெழுத்திட கேட்டும் பிரசாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com