கோவை சிறுமி வியோமா பிரியாவுக்கு பால புரஸ்கார் விருது வழங்கி கௌரவிப்பு pt
தமிழ்நாடு

சிறுவனை காப்பாற்றச் சென்று உயிர்நீத்த கோவை சிறுமி.. ’பாலபுரஸ்கார் விருது’ கொடுத்து கௌரவம்!

சிறுவனை காப்பாற்ற முயன்றதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமியின் துணிச்சலைக் கௌரவிக்கும் வகையில் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

Rishan Vengai

கோவை அருகே மின்சாரம் தாக்கிய சிறுவனை காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்த வியோமா பிரியாவுக்கு பாலபுரஸ்கார் விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, தாயாரிடம் விருதை வழங்கி சிறுமியின் துணிச்சலை கௌரவித்தார். தாயார் அர்ச்சனா, மகளின் துணிச்சலுக்காக விருதைப் பெற்றது கசப்பான தருணம் என வேதனையுடன் தெரிவித்தார்.

கோவை அருகே மின்சாரம் தாக்கிய சிறுவனை காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்த சிறுமிக்கு பால புரஸ்கார்விருது வழங்கப்பட்டது.

வியோமா பிரியாவிற்கு உயரிய விருது

கோவை சரவணம்பட்டியில் உள்ள அடுக்குமாடிகுடியிருப்பைச் சேர்ந்த பாலசந்தர் என்பவரின் 8 வ்யது மகள் வியோமா பிரியா. அவர் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த போது 6 வயதுசிறுவனை மின்சாரம் தாக்கியது. அப்போது அவரை காப்பற்றமுயன்றபோது, மின்சாரம்தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில் சிறுமியின் துணிச்சலை கௌரவிக்கும் வகையில் குழந்தைகளுக்கான உயரிய விருதான பாலபுரஸ்கர் விருதை, வியோமா பிரியாவின் தாயாரிடம் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.

மகள் குறித்து பேசிய தாய்..

டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கையால் சிறுமியின் துணிச்சலுக்கான பால புரஸ்கார் விருதை அவருடைய தாயார் பெற்றுக்கொண்டார்.

மகள் குறித்து பேசிய தாயார் அர்ச்சனா, ”எங்கள் மகள் வயோமா பிரியா சார்பாக நான் துணிச்சலுக்கான விருதைப் பெறுகிறேன். எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குழந்தைகள் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பூங்காவில் உள்ள ஒரு சறுக்கு விளையாட்டு அமைப்பின் மீது சேதமடைந்த நிலத்தடி கேபிள்ஒயர் பட்டு மின்சாரம் பாய்ந்தது. அதில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி விழுந்தான், அப்போது எங்கள் வயோமா அவனைக் காப்பாற்ற முயற்சித்தபோது அவளும் மின்சராத்தில் சிக்கிக்கொண்டாள். இந்த விருதைப் பெறுவது எங்களுக்கு ஒரு கசப்பான தருணம்... இந்த விருதைப் பெற என் மகளே இங்கு இருந்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என வேதனையோடு பேசினார்.