எழுத்தாளர் உதய்சங்கருக்கு பால புரஸ்கார், ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு

பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர்களுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சாகித்ய புரஸ்கார்,யுவ புரஸ்கார் விருதுகள்
சாகித்ய புரஸ்கார்,யுவ புரஸ்கார் விருதுகள்PT

2023 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகடாமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது ‘ஆதனின் பொம்மை’ என்ற நாவலுக்காக உதய சங்கருக்கும், யுவ புரஸ்கார் விருது ‘திருக்கார்த்தியல்’ என்ற சிறு கதைக்காக ராம் தங்கம் என்பவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கான விருதுகள் சாகித்ய அகாடமி சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி இந்த ஆண்டிற்கான சாகித்யஅகடாமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பால சாகித்ய புரஸ்கார் விருது ‘ஆதனின் பொம்மை’ என்ற நாவலுக்காக உதய சங்கருக்கும், யுவ புரஸ்கார் விருது ‘திருக்கார்த்தியல்’ என்ற சிறு கதைக்காக ராம் தங்கம் என்பவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து ‘ஆதனின் பொம்மை’ நாவலின் ஆசிரியர் புதிய தலைமுறைக்கு பேசும் போது, “இந்த விருது கிடைத்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். எனது இந்த நாவலானது, கீழடி குறித்தும் சிந்துவெளி நாகரீகம் குறித்தும் இளையவர்கள் தெரிந்துக்கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலை எழுதுவதற்காக பல வரலாற்று புத்தகங்களை ஆய்வு செய்து எழுதியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

உதய சங்கர்
உதய சங்கர்

திருகார்த்தியல் என்ற சிறுகதை தொகுப்பு எழுதிய எழுத்தாளர் ராம் தங்கம் புதிய தலைமுறைக்கு பேசும் போது,

ராம் தங்கம்
ராம் தங்கம்

” ‘திருகார்த்தியல்’ எனது சிறுகதைத் தொகுப்பு. இலக்கியத்தில் எழுதுபவர்களுக்கு சாகித்ய அகடாமி விருது என்பது பெரிய அங்கீகாரம். அது எனக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. 2019ல் வெளிவந்த இந்த புத்தகத்திற்கு ஏழாவதாக கிடைத்தது தான் சாகித்ய விருது. இதற்கு முன் அசோகன் மித்திர விருது, சுஜாதா விருது வடசென்னை தமிழ் விருது படைப்பிலக்கிய விருது, சௌமா விருது, அன்றில் விருது பல விருதுகள் பெற்றுள்ளது.

இதைத் தவிர கல்லூரி பாடதிட்டத்திலும் இதன் கதையானது இருக்கிறது. மாணவர்கள் முதுகலை ஆய்விற்கு பயன்படுத்தி வருகிறார்கள். கிட்டத்தட்ட 1000 மேல் பிரதிகள் விற்பனை ஆகி உள்ளது. இது சிறுகதை தொகுப்பானது அன்றாடம் நம் வாழ்வில் சந்தித்த பார்த்த நிகழ்வுகள் தான் புத்தகமாக வெளிவந்துள்ளது” என்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com