கேக் வழங்கும் திட்டம் Pt web
தமிழ்நாடு

கொளத்தூர் | குழந்தைகள் தின கேக் வழங்கும் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கு கேக் வழங்கும் திட்டத்தை, முதல்வர் விஜய் கொளத்தூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் இருந்து தொடங்கி வைத்துள்ளார்.

Premkumar S

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14-ம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி, பள்ளிகளில் ஆண்டு தோறும் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கட்டுரை மற்றும் கவிதை போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும். இந்தச்சூழலில் தான், தமிழகத்தின் முதலமைச்சராக முதன்முறையாக பதவியேற்றுள்ள விஜய், சமீபத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பயிலும் குழந்தைகளுக்கு கேக் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

தமிழ்நாட்டில் முதன்முறையாக கொண்டு வரப்பட்டுள்ள இத்திட்டத்தையொட்டி, கேக் வாங்குவதற்காக 9.27 கோடி செலவில் தமிழக அரசு டெண்டர் விட்டது. ஒவ்வொரு கேக்கும், 45 கிராம் எடை கொண்டுள்ளது. நாளை பள்ளி விடுமுறை நாள் என்பதால், இன்று (நவம்பர் 13) தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கேக் துண்டுகள் வழங்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தை, கொளத்துரில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் முதலமைச்சர் விஜய் குழந்தைகளுக்கு கேக் வழங்கி தொடங்கி வைத்துள்ளார். அதேபோல, சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் கேக்குடன், குழந்தைகள் தின வாழ்த்து அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. அதில், “All is Well, confident-ah இருங்க.. பிரியமுடன் விஜய்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.