காலை உணவுத் திட்டம் Pt web
தமிழ்நாடு

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!!

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

Premkumar S

5-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, ஊட்டச்சத்துள்ள உணவளிக்கும் வகையில், காலை உணவுத் திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்தார். பின்னர், இத்திட்டம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்திற்கு முந்தைய திமுக அரசில் ”முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்” என பெயர் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 2026 சட்டப்பேரவையில் வென்று ஆட்சிக்கு வந்துள்ள முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, இந்தத் திட்டத்தை 8 வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் என தெரிவித்திருந்தது.

காலை உணவுத் திட்டம்

அதன்படி, விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை முதல்வர் விஜய் இன்று காலை, சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தொடங்கி வைத்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ள இத்த்திட்டத்தின் மூலம், தமிழகம் முழுவது 15.30 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, மாணவர்களுக்கு உணவு பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.