சட்டமன்றத்தில் முதல்வர் பேச்சு pt
தமிழ்நாடு

’ இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part 1 தான்; 2026 ல்’ - சட்டமன்றத்தில் முதல்வர் பேச்சு!

” பல தடைகளை கடந்து சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறோம்.” - முதலமைச்சர் ஸ்டாலின்.

ஜெனிட்டா ரோஸ்லின்

இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 14-ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்போவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், " மீண்டும் திமுக ஆட்சியே அமையும். ஸ்டாலின் என்றால் உழைப்பு என்று சொன்ன கலைஞர் இன்று இருந்திருந்தால் சாதனை என்று கூறியிருப்பார். 7 ஆவது முறையாக திமுக ஆட்சியமைக்கும் . இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் பார்ட் 1 தான்; 2026ஆம் ஆண்டில் திராவிட மாடல் அரசின் வெர்ஷன் 2.0 வரவிருக்கிறது.

இதுவரை யாரும் செய்யாத பல சாதனைகலை திமுக அரசு செய்துள்ளது. மே 7 ல் திமுக ஆட்சி அமைத்து ஆண்டு நிறைவடைந்து 5 ஆவது ஆண்டு தொடங்க உள்ளது. இதுவரை இல்லாத அளவில் தமிழ்நாடு வளர்ச்சியடைந்துள்ளதாக ஒன்றிய அரசே தெரிவித்துள்ளது. மிகச்சிறந்த 100 பல்கலைக்கழங்கள் பட்டியலில் 22 பல்கலைக்கழங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன.

கடந்த 4 ஆண்டுகளாக பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் இல்லை.கடந்த அரசின் நிர்வாக சீர்கேட்டால் கட்டாந்தரையில் ஊர்ந்துக் கொண்டிருந்தது அரசு. இருளை போக்கி தலைநிமிர்ந்து நடக்கிறது திமுக அரசு. மேலே பாம்பு கீழே நரிகள் . குதித்தால் அகழி; ஓடினால் தடுப்புச் சுவர் என எண்ணற்ற தடைகள். இது மணிப்பூர் , காஷ்மீர் அல்ல; இது தமிழ்நாடு. சட்டம் ஒழுங்கு சீராகவும், அமைதி பூங்காவாகவும் தமிழ்நாடு விளங்குகிறது.

தமிழகத்தில் சாதி, மத , கலவரங்கள் பெரிய அளவில் இல்லை. சாதி, மத கலவரங்களை தூண்ட நினைத்தாலும் அதனை தமிழக மக்களே முறியடிக்கிறார்கள். உத்தரப்பிரதேச கும்பமேளா மரணங்களும் இங்கு நிகழவில்லை. இது தமிழ்நாடு.

பாலியல் வன்கொடுமைகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற வேண்டும். குற்றங்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற ஒவ்வொரு காவலர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது நம்முடைய கூட்டு பொறுப்பு.

சின்ன சின்ன சம்பவங்களையும் காவல் துறையினர் உணர்ந்து தடுக்க வேண்டும். பல தடைகளை கடந்து சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஒன்றிய அரசு, ஆளுநர் என தடைகளை கடந்துதான் தமிழக அரசு செயல்படுகிறது. ஆதிக்கம் , தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல்ல இனி அரசு ஆவணங்களிலிருந்து நீக்கப்படும். செப்டம்பர் 6ஆம் தேதி காவலர்கள் நாள் கொண்டாடப்படும்; காவலர்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை உறுதி செய்யப்படும் உதகை, தருமபுரியில் காவலர் குடியிருப்புகள் அமைக்கப்படும்; விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தீயணைப்பு மண்டலம் உருவாக்கப்படும் . சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கு காவலர் நாளில் விருதுகள் வழங்கப்படும் .” என்று தெரிவித்துள்ளார்.