பெண்களின் பாதுகாப்புக்காக சென்னையில் களமிறங்கப்போகும்... ”ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்"
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சென்னை முழுவதும் ‘ ரோபோட்டிக் காப் ‘ என்ற புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது சென்னை பெருநகர காவல்துறை. ரோபோட்டிக் காப் என்றால் என்ன? அது எப்படி செயல்படும் என்பது குறித்த தகவல்களை காணலாம்.
இது குறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், “சென்னை பெருநகரில் பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய , சென்னை பெருநகர காவல் துறையினரால் ”ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்’ என்ற புதிய பாதுகாப்பு சாதனம் தற்போது சென்னை நகரின் முக்கியமான 200 இடங்களில் நிறுவப்பட உள்ளது.” என்று தெரிவித்துள்ளது.
இதன் முக்கிய அம்சங்கள் என்ன?
24×7 நேரடி கண்காணிப்பு
360° வீதியிலும் பல மீட்டர் தூரம் கண்காணிக்கும் திறன் D
எளிதில் அழுத்தக்கூடிய சிவப்பு ஆபத்து பொத்தான்
எச்சரிக்கை ஒலி மற்றும் உடனடி காவல் அழைப்பு
ஜிபிஎஸ் மூலம் துல்லிய இடம் கண்காணிப்பு
உயர் தர கேமரா மற்றும் மைக்ரோபோன்
பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் காவல்துறை கண்காணிப்பு
ஆபத்தில் உள்ள நபர் அல்லது அருகிலுள்ளவர் இந்த சிவப்பு பொத்தானை அழுத்தினால்:
காவல்துறைக்கு உடனடி அழைப்பு
அருகிலுள்ளவர்களுக்கு எச்சரிக்கை ஒலி
வீடியோ கால் மூலம் நேரடி காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு
ரோந்து வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைவில் வருகை
கேமரா பதிவு மூலம் புலனாய்வு மற்றும் நடவடிக்கை
சென்னையின் ரயில் நிலையங்கள் இ பேருந்து நிலையங்கள் , வணிக வளாகங்கள் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் , மருத்துவமனைகள் பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் இது நிறுவப்பட உள்ளது.
இந்த சாதனம் பெண்கள், குழந்தைகள் மற்றும் அனைத்து பொதுமக்களுக்கும் உயிர் காக்கும் நம்பிக்கையான பாதுகாப்பு தோழராக செயல்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.