மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு புதிய தலைமுறை
தமிழ்நாடு

வெள்ள பாதிப்பு - சென்னையிலுள்ள கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஆய்வு!

ஜெனிட்டா ரோஸ்லின்

மழை குறித்த பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள இன்று இரவு மதுரை செல்ல இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அதனை தொடர்ந்து நாளை தூத்துக்குடி சென்று ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது சென்னை எழிலகத்தில் செயல்படும் மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா மற்றும் பிற அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மேற்கொண்ட ஆய்வில் தென்மாவட்ட வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார் முதல்வர். இதனை தொடர்ந்து மீட்பு பணிக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பிற மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக மீட்பு பணிகள் எப்படி செல்கிறது என கேட்டறிந்தார் முதல்வர்.

இதற்கு முன்னதாக I.N.D.I.A கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் நேற்று பங்கேற்க டெல்லி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அதில் பங்கேற்ற பின்னர் தென் மாவட்டங்கள் மற்றும் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பினை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமரை மோடியை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.