கிருஷ்ணகிரி இரு சமூகத்தினரிடையே மோதல்
கிருஷ்ணகிரி இரு சமூகத்தினரிடையே மோதல் pt desk
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி | இரு சமூகத்தினரிடையே மோதல்.. 23 பேர் மீது வழக்கு - 13 பேர் கைது

webteam

கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்காடி கிராமத்தில் இரு பிரிவினர் இடையே கோயில் புதுப்பிக்கும் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது இரு பிரிவினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதில், காவல்துறையை சேர்ந்தவர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

village

மேலும், இரவு நேரத்தில் பட்டியலின மக்களின் குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மீண்டும் மோதல்களை தவிர்க்க அப்பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் தமிழரசி, வட்டாட்சியர் விஜயக்குமார் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மோதலின் பின்னணி என்ன?

சோக்காடி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த மாரியம்மன் கோயிலில் நடைபெறும் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பட்டியலின மக்கள் கிரானைட் கற்களை பாலிஷ் செய்தபோது, அதிகளவு தூசி வெளிவருவதாகக் கூறி, மற்றொரு பிரிவைச் சேர்ந்த குழுவினர் கோயில் பணியை நிறுத்தினர். இதனையடுத்து அதிமுகவை சேர்ந்த கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அம்சவேணியின் கணவர் ராஜன் பேச்சுவார்த்தை நடத்த வந்தபோது ஏற்பட்ட வாக்குவாதம் இரு பிரிவினர் இடையேயான மோதலாகஉருவெடுத்தது.

arrested

இதுகுறித்து இருதரப்பினர் இடையே நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 13 பேரை கைது செய்துள்ளனர்.