மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல் file image
தமிழ்நாடு

நாளை முதல் பரப்புரையை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

PT WEB

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் அடுத்த மாதம் 17ஆம் தேதி வரை தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில்,

திருச்சி மற்றும் பெரம்பலூரில் நாளை (மார்ச் 22) பரப்புரையை செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தொடர்ந்து 23ஆம் தேதி தஞ்சை, நாகையில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

25ஆம் தேதி கன்னியாகுமரி, நெல்லையில் வாக்கு சேகரிக்கும் ஸ்டாலின் அதற்கு அடுத்த நாள் தூத்துக்குடி, ராமநாதபுரத்திலும்,

அடுத்த புதன்கிழமை தென்காசி, விருதுநகரிலும் பரப்புரை மேற்கொள்வார் என திமுக தலைமை தெரிவித்துள்ளது.

இதேபோல 29ஆம் தேதி தருமபுரி கிருஷ்ணகிரியில் பரப்புரை மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் 30ஆம் தேதி சேலம், கள்ளக்குறிச்சியில் பரப்புரை மேற்கொள்வார் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த மாதம் 31ஆம் தேதி ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூரில் I.N.D.I.A கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்கு சேகரிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், அதன் பின் ஏப்ரல் 2ஆம் தேதி வேலூர் மற்றும் அரக்கோணத்தில் பரப்புரை மேற்கொள்வார்.

தொடர்ந்து அடுத்த மாதம் 3ஆம் தேதி திருவண்ணாமலை, ஆரணியிலும், 5ஆம் தேதி கடலூர், விழுப்புரத்திலும் வாக்கு சேகரிக்கும் ஸ்டாலின், 6ஆம் தேதி சிதம்பரம், மயிலாடுதுறையிலும், 7ஆம் தேதி புதுச்சேரியிலும் பரப்புரை மேற்கொள்கிறார்.

9ஆம் தேதி மதுரை, சிவகங்கையிலும், 10ஆம் தேதி தேனி, திண்டுக்கல்லிலும், 12ஆம் தேதி திருப்பூர், நீலகிரியிலும், 13ஆம் தேதி கோவை, பொள்ளாச்சியிலும் ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

அடுத்த மாதம் 15ஆம் தேதி திருவள்ளூர், வடசென்னையிலும், 16ஆம் தேதி காஞ்சிபுரம், திருபெரும்புதூரிலும் முதல்வர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்கிறார். இறுதியாக அடுத்த மாதம் 17ஆம் தேதி தென்சென்னை மற்றும் மத்திய சென்னை தொகுதிகளில் முதலமைச்சர் பரப்புரை மேற்கொள்கிறார்.