நாய்களின் இனப்பெருக்கம் முகநூல்
தமிழ்நாடு

நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

PT WEB

அனைத்து துறைகளும் இணைந்து நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே. என்.நேரு, மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கிராமங்கள் உட்பட மாநிலம் முழுவதும் நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கான மருத்துவ வசதிகளை உருவாக்க முதல்வர் அறிவுறுத்தினார்.

கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் அதன் விரிவாக்க மையங்களில் கருத்தடை பணிகளை மேற்கொள்ளவும், அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் நாய்கள் கணக்கெடுப்பை நடத்தவும் உத்தரவிட்டார். நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்வது தொடர்பாக மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என அறிவுறுத்திய முதல்வர், உடல்நலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை மீட்டு சிகிச்சை அளிக்க காப்பகங்களை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார்.