தமிழ்நாடு

சென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் -முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

JustinDurai
அயோத்தி தாசர் பண்டிதரின் பெருமையை போற்றும் வகையில் சென்னையில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அயோத்தி தாசர் பண்டிதரின் பெருமையை போற்றும் வகையில் அவரின் 175ஆம் அண்டு பிறந்தநாள்சென்னையில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார். தமிழர், திராவிடம் ஆகிய வார்த்தைகளை ஆயுதமாக பயன்படுத்திய மொழிப் போராளி அயோத்தி தாசர் பண்டிதர் என மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். தமிழ்நாட்டு அரசியலை தமிழர், திராவிடம் என்ற சொல்லின்றி நடத்த முடியாது எனவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
யார் இந்த அயோத்தி தாசர் பண்டிதர்?
அயோத்தி தாசர் பண்டிதர் நவீன இந்தியா கண்ட மாபெரும் அறிஞர்களில் ஒருவர். தென்னிந்தியாவில் சமூகப் புரட்சிக்கு வித்திட்டவர். தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கி வைத்தவர். தமிழகத்தில் பௌத்த மறுமலர்ச்சியை தோற்றுவித்தவர். தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையைத் தொடங்கி வைத்தவர். தமிழன் என்ற அடையாளம் தந்தவர். திராவிடன் என்ற கட்டமைப்பை உருவாக்கியவர் ஆவார். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குரலாக ஒலித்த அயோத்திதாசர் பண்டிதர் 1914-ம் ஆண்டு மே 5-ம் தேதி காலமானார்.