பேட்மிண்டன்  Chatgpt
தமிழ்நாடு

சென்னை | பகலில் லேப்டாப்.. இரவில் ராக்கெட் : இளைஞர்களின் புதிய பிட்னஸ் டிரெண்ட்!!

பகலில் லேப்டாப்... இரவில் ராக்கெட்... சென்னையின் நைட் லைஃபில், இளைஞர்களின் புதிய ஃபிட்னஸ் டிரெண்டாக மாறியுள்ள பேட்மிண்டன் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..

PT WEB

சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் வேலை முடிந்தபிறகு, இரவு நேரத்தில் பேட்மிண்டன் விளையாடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. குறிப்பாக ஐ.டி. ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் இரவுநேர ஸ்லாட்களை தேர்வு செய்து விளையாடிவருகின்றனர். பகல் நேரத்தில் வேலைப்பளு அதிகமாக இருப்பதால், இரவில்12 மணி வரை விளையாடுவதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர்.

பேட்மிண்டன்

சில உள்விளையாட்டு அரங்குகள் நள்ளிரவு வரை பேட்மிண்டன் விளையாடுவதற்கான வசதிகளை வழங்குவதால், நண்பர்கள் குழுவாக சேர்ந்து 2 மணி நேரத்திற்கு கோர்ட் புக் செய்து விளையாடுவது வழக்கமாக உள்ளது. அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணியாற்றுபவர்களுக்கு, வேலைக்குப்பிறகு உடல் இயக்கம் கிடைப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவ்வாறும், இரவுகள் உறங்குவதற்கானது மட்டுமல்ல, தங்களை ரீசார்ஜ் செய்துகொள்வதற்குமானதும்தான், என்பதை நிரூபிக்கிறார்கள் சென்னை வாழ் இளைஞர்கள்.