ராணி அண்ணா நகரைச் சேர்ந்த ஹன்சிக் சாய் மற்றும் மகதீஷ் ஆகிய சிறுவர்கள் திரிசூலம் ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் தேடினர்.
அப்போது, ஏரிக்கரையில் இருவரின் உடல்களும் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். காவல் துறையினர் உடல்களை மீட்டு விசாரித்து வருகின்றனர்.