ரவுடியை சூட்டுப் பிடித்த காவல் உதவி ஆய்வாள pt desk
தமிழ்நாடு

சென்னை | போலீசாரை தாக்கிவிட்டு தப்பமுயன்ற பிரபல ரவுடியை சுட்டுப் பிடித்த காவல் உதவி ஆய்வாளர்..!

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே பிரபல ரவுடி தூத்துக்குடி ஐகோர்ட் மகாராஜா என்பவரை காவல் உதவி ஆய்வாளர் காலில் சுட்டு பிடித்து கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ஆனந்தன்

தூத்துக்குடியில் இருந்து கடந்த வாரம் சென்னைக்கு வந்து ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் மகனை கடத்தி கொலை செய்வதற்கு திட்டம் தீட்டிய போது போலீசில் 5 பேர் சிக்கிக் கொண்டனர். நகைக் கடை அதிபர் மகனை கொலை செய்வதற்கு வேறு ஒருவரின் தூண்டுதலின் பேரில் இவர்கள் 5 பேரும் கூலிப் படையினராக செயல்பட்டு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர்

அப்போது தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜா இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து திருநெல்வேலி பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கிண்டி தனிப்படை போலீசார், திருநெல்வேலி மார்க்கெட் பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி மகாராஜாவை கிண்டி தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இதைத் தொடர்ந்து குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை கிண்டி ரேஸ்கோர்ஸ் அருகே நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்ததை அடுத்து இன்று அதிகாலை வாகனத்தை எடுக்கச் சென்றபோது மறைத்து வைததிருந்த நாட்டு துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட முயற்சித்துள்ளார்

இந்நிலையில், காவல்துறை அதிகாரியை தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற ரவுடி மகாராஜாவை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வலது காலில் சுட்டு பிடித்து கைது செய்தார். காலில் காயம் ஏற்பட்டுள்ள ரவுடி மகாராஜா சென்னை அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கிண்டி போலீசார் மற்றும் வேளச்சேரி போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.