10 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி கொள்ளை
10 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி கொள்ளைpt desk

ராணிப்பேட்டை | அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி கொள்ளை

அரக்கோணம் அருகே அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து 10 சவரன் தங்க நகை அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 21 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளைபோன சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Published on

செய்தியாளர்: நாராயணசாமி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மூகாம்பிகை நகர் பகுதியில் அமுதா என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவரது உறவினருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குச் சென்று விட்டு நள்ளிரவில் தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்பொழுது அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது ஏழு சவரன் தங்க நகை கால் கிலோ வெள்ளி பொருட்கள் 20 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதேபோல் யுவராஜ் என்ற தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து மூன்று சவரன் தங்க நகை கால் கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த அரக்கோணம் நகர காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

10 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி கொள்ளை
சென்னை | ’இதோ உங்க பணி ஆணை’ அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.62.80 லட்சம் மோசடி - இருவர் கைது

இதையடுத்து கைரேகை நிபுணர்களை வரவைத்து கைரேகை எடுக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளது. கிராமப்புறத்தில் அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com