Death File Photo
தமிழ்நாடு

சென்னை | திடீரென தலையில் விழுந்த இரும்பு கேட் - சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்

சென்னை நங்கநல்லூரில் 7 வயது சிறுமியின் தலையில் இரும்பு கேட் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை நங்கநல்லூர், எம்.எம்.டி.சி.காலனி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சம்பத். இவரது மகள் ஐஸ்வர்யா (7), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை நேற்று மாலை பள்ளியிலிருந்து சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்து வீட்டின் கேட்டின் முன்பு சிறுமியை இறக்கி விட்டு, இருசக்கர வாகனத்தை உள்ளே விடுவதற்காக கேட்டை திறந்து உள்ளே சென்றுள்ளார்.

அப்போது வீட்டின் வெளியே நின்றிருந்த சிறுமி, கேட்டை மூடுவதற்காக தள்ளிய போது இரும்பு கேட் உடைந்து சிறுமியின் தலையில் விழுந்துள்ளது. இதில், பலத்தை காயமடைந்த சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றர்.

அப்போது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.