செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை, மதுரவாயல் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் அருகே அடையாளம்பட்டு கூவம் தரைப்பாலம் உள்ளது. சென்னையில் சமீபத்தில் பெய்த கமைழை காரணமாக தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி அதிகாலை முகப்பேரைச் சேர்ந்த சுனில் வர்க்கீஸ் (54) என்பவர் தனது சொகுசு காரில் ஆபத்தை உணராமல் தரைபாலத்தை கடக்க முயன்றார். அப்போது வெள்ளத்தில் சிக்கிய கார் இழுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்த தடுப்புகளில் சிக்கிக் கொண்டது.
இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார், காரின் கண்ணாடியை உடைத்து உயிருக்குப் போராடிய கார் உரிமையாளரை சினிமா பாணியில் மீட்டனர். அதைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் உதவியுடன் கயிறு கட்டி கரையும் மீட்டனர். இந்த காட்சிகள் வெளியாகி காரில் சிக்கிய நபரை காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்தது.
இதற்கிடையே சென்னை மாநகர கூடுதல் ஆணையர் நரேந்திர நாயர் வீர தீர செயலில் ஈடுபட்டதாக மதுரவாயல் காவல் நிலைய காவலர்கள் இருவரை நேரில் அழைத்து பாராட்டி சாதூர்யமாக செயல்பட்டு பத்திரமாக மீட்டதற்கு வாழ்த்து தெரிவித்து சான்று வழங்கி உள்ளார்.