செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பாலாஜி நகர் பிராதான சாலையில் தனிநபருக்குச் சொந்தமான இடத்தில் குப்பைகளுக்கு இடையே தொப்புள் கொடியுடன் பெண் சிசு ஒன்று அழுது கொண்டே இருப்பதை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்டுள்ளனர். இதையடுத்து உடனடியாக சிசுவை மீட்டு சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்,
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிசுவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர், இதைத் தொடர்ந்து சிசுவை குப்பைக்குளுக்கு இடையே வீசியது யார் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செயதனர் அப்போது 20 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் சிசுவை வீசிவிட்டுச் சென்றது பதிவாகி இருந்தது.
இந்நிலையில், உடல் பலவீனமாக இருந்த கல்லூரி மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் சிசு தாயிடம் ஒப்படைக்கப்பட்டு இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கல்லூரி மாணவி குழந்தை பெற்று அதை குப்பையில் வீசியது அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.