தவறவிட்ட ஐபேட் மற்றும் சான்றிதழை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்
தவறவிட்ட ஐபேட் மற்றும் சான்றிதழை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்pt desk

சென்னை | ஆட்டோவில் தவறவிட்ட ஐபேட் மற்றும் சான்றிதழை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

சென்னை அருகே ஆட்டோவில் தவறவிட்ட ₹1.50 லட்சம் மதிப்பிலான ஆப்பிள் ஐ பேட் மற்றும் கல்லூரி சான்றிதழ்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை காவல் ஆய்வாளர் பாஸ்கரன் வெகுவாக பாராட்டினார்.
Published on

செய்தியாளர்: எழில்

சென்னை மணலி புதுநகரை சேர்ந்தவர் தன்யா சந்தோஷி (29). இவர், பெங்களுாரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் மேல் படிப்புக்காக மெட்ராஸ் யூனிவர்சிட்டி சென்று விட்டு தனது வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த ஆப்பிள் ஐ பேட் மற்றும் சான்றிதழ்கள் அடங்கிய பையை ஆட்டோவில் தவறவிட்டுள்ளார்.

இதையடுத்து அவர், தனது தந்தையுடன் மணலி புதுநகர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பாஸ்கரிடம் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், ₹1.50 லட்சம் மதிப்பிலான ஆப்பிள் ஐபேட் மற்றும் சான்றிதழ் அடங்கிய பையுடன் காவல் நிலையத்திற்கு ஆட்டோ ஓட்டுநர் சிவகுமார் வந்துள்ளார்.

தவறவிட்ட ஐபேட் மற்றும் சான்றிதழை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்
திருவள்ளூர் | மது போதையில் தகராறு – மகனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற தாய் கைது

இதைப் பார்த்த தன்யா சந்தோஷி மகிழ்ச்சி அடைந்தார். இதையடுத்து காவல் ஆய்வாளர் பாஸ்கரன் முன்னிலையில் சான்றிதழ்களுடன் இருந்த ஆப்பிள் ஐ பேட் பையை உரியவரிடம் ஒப்படைத்தனர். பின்னர் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையான செயலை பாராட்டி அவருக்கு ஆய்வாளர் பாஸ்கரன் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். அதே போன்று லேப்டாப்பை தொலைத்த ஐடி ஊழியரும் நன்றி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com