Tragic decision pt desk
தமிழ்நாடு

சென்னை | இரண்டு நாட்களாக திறக்கப்படாத வீடு.. உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி!

நங்கநல்லூரில் வீட்டில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை நங்கநல்லூர், அம்பேத்கர் தெரு, ரத்தினபுரத்தைச் சேர்ந்தவர்கள் அசோகன் (45) - புனிதா (40) தம்பதியர். அசோகன் கார் ஓட்டுநராகவும், புனிதா சென்னை மருத்துவக் கல்லூரியில் செவிலியராகவும் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக நங்கநல்லூரில் வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில், கடந்த இரு தினங்களாக வீடு திறக்காமல் இருந்துள்ளது.

இதனால் வீட்டின் உரிமையாளர் சேதுராமன், கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது கணவன் மனைவி இருவரும் தூக்கிட்ட நிலையில், சடலமாக கிடந்துள்ளனர்.

இது குறித்து சேதுராமன் பழவந்தாங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் அவர்களை கோடை விடுமுறைக்கு கள்ளக்குறிச்சியில் உள்ள தாத்தா வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.