மலை பாம்பு – பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர் pt desk
தமிழ்நாடு

சென்னை | வீட்டிற்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள மலை பாம்பு – பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

வண்டலூர் அருகே குடியிருப்பு பகுதிகுள் புகுந்த ஏழு அடி நீளமுள்ள மலை பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து வண்டலூர் பூங்காவில் ஒப்படைத்தனர்.

PT WEB

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை வண்டலூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தீப். நேற்றிரவு இவரது வீட்டின் உள்ளே மலை பாம்பு ஒன்று சென்றுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தீயனைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

மலை பாம்பு – பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வெகு நேரமாக வீட்டு வளாகத்தில் பாம்பை தேடிப்பார்த்தனர். அப்போது கோழிகள் இருக்கும் கூண்டில் மலை பாம்பு பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பாம்பு பிடிக்கும் கருவியைக் கொண்டு ஏழு அடி நீளமுள்ள மலை பாம்பை பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து பிடிபட்ட அந்த பாம்பை, தீயணைப்புத் துறையினர் வண்டலூர் பூங்காவில் ஒப்படைத்தனர், குடியிருப்பு பகுதிக்குள் மலை பாம்பு பிடிப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.