செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர், லிங்கம் நகர், தனியார் அடிக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தனியார் நிறுவன ஊழியர் பாலாஜி (42), இவரது மனைவி மகேஸ்வரி அவரது மகளை நேற்று காலை கையெழுத்து வகுப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இதையடுத்து மதியம் 1 மணியளவில் திரும்பி வந்து பார்த்துள்ளார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகை, 1.50 லட்சம் பணம், கொள்ளை போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் பீர்க்கன்காரணை போலீசார், நிகழ்விடம் வந்து விசாரணை செய்து கைரேகை நிபுணர்கள் மூலம் கைரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.