செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை மணப்பாக்கம் பாலத்தின் அருகில் உள்ள காலி இடத்தில் கண்காணித்து, அங்கு காருடன் சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 நபர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில், அவர்களை சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்ததது.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், அவர்கள் நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (24), ஆழ்வார் திருநகர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (20), சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த யோகேச்ஜ் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 நபர்களையும் கைது செய்த நந்தம்பாக்கம் போலீசார், அவர்களிடமிருந்து சுமார் 11 கிராம் மெத்தபெட்டமைன், 3 ஐபோன்கள் மற்றும் 1 கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு எதிரிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.