இருவர் உயிரிழப்பு pt desk
தமிழ்நாடு

செங்கல்பட்டு | இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து - இருவர் உயிரிழப்பு

மதுராந்தகம் ரயில்வே மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

PT WEB

செய்தியாளர்: உதயகுமார்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ரயில்வே மேம்பாலத்தில் நள்ளிரவில் ஜமீன் எண்டத்தூர் பகுதியைச் சேர்ந்த வசந்த் என்பவர் பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மாம்பாக்கம் பகுதியில் இருந்து மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த ஜீவகுமார் என்பவர் மதுராந்தகம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

Police station

இதையடுத்து எதிர்பாராத விதமாக இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலீசார், இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.