Death File Photo
தமிழ்நாடு

செங்கல்பட்டு | நின்றிருந்த கார் மீது லாரி மோதிய விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

சிங்கபெருமாள்கோவில் பகுதியில் சிக்னலில் நின்றிருந்த சொகுசு கார் மீது கனரக லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

PT WEB

செய்தியாளர்: உதயகுமார்

கார்த்திக் என்பவர் தனது மனைவி நந்தினி, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுவிட்டு; மதுரைக்குத் திரும்பியுள்ளனர். அப்போது சிங்கபெருமாள்கோவில் திருத்தேரி அருகே சிக்னலில் கார் நின்று கொண்டிருந்த போது. காரின் பின்னால் அதிவேகமாக வந்த கனரக லாரி மோதிய விபத்துக்குள்ளானது. இதில், கார் ஓட்டுநர் சரவணன், அய்யனார் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து காரில் இருந்த கார்த்திக் அவரது மனைவி நந்தினி, நந்தினியின் தாயார் தெய்வபூஞ்சாரி மற்றும் ஓரு வயது குழந்தை சாய்வேலன், 7வயது சிறுமி இளமதி ஆகியோர் படுகாயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு குழந்தை சாய் வேலன் சிகிச்சை பலனின்றி உயரிழந்த நிலையில் சிறுமி இளமதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்