ஆந்திராவில் அதிகரிக்கும் கேன்சர்
ஆந்திராவில் அதிகரிக்கும் கேன்சர்web

தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுபாடு காரணமா? புற்றுநோயின் மையமாக மாறிவரும் ஆந்திரா? அதிர்ச்சி தகவல்!

ஆந்திராவில் புற்றுநோயின் பாதிப்புகள் அதிகமாக பதிவாகியுள்ளதால், அம்மாநிலம் புற்றுநோயின் மையமாக உருவெடுத்துள்ளது.
Published on

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலபத்ரபுரம் கிராமத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது. தேசிய சராசரியை விட மூன்று மடங்கு
அதிகமான புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

அதிகாரப்பூர்வமாக 10 ஆயிரம் பேரில் 32 நபருக்கு புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி இருந்தாலும், அதிகாரப்பூர்வமற்ற மதிப்பீடுகளின்படி சுமார் 100 பேருக்கு புற்றுநோய் பாதிப்புகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எதனால் பாதிப்பு அதிகமாகிறது?

அருகிலுள்ள தொழிற்சாலைகளால் ஏற்படும் நிலம், நீர் மற்றும் காற்று மாசுபாடு காரணமாக புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மருத்துவ முகாம்கள் மற்றும் பரிசோதனைகளை நடத்தி, காரணங்களை கண்டறியும் முயற்சியில், மாநில அரசு இறங்கியுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட கிராம மக்கள் அச்சத்தில்
உறைந்துள்ளனர். பல ஏழை மக்கள் சிகிச்சைக்கான பண வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com