வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வரும் 6 ஆம்தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைந்துள்ளது. ஓரிரு இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. தென்னிந்தியாவில், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, வரும் 6 ஆம்தேதி வரை தமிழத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒன்று முதல் 4 ஆம் தேதி வரை தமிழகத்தின் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை 1ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது