chennai vr mall
chennai vr mallweb

கூடுதலாக பார்க்கிங் கட்டணம்.. சென்னை VR மாலுக்கு வந்த அதிரடி உத்தரவு!

பார்க்கிங் செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்ததாக கொடுக்கப்பட்ட புகாரில், சென்னை விஆர் மாலுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னை வி.ஆர் மாலில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக்கூடாது என, சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு இழப்பீடாக,
புகார்தாரருக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கவும் ஆணையிட்டுள்ளது. இதற்கான ஆணையை வி.ஆர் மால் பெற்ற தேதியிலிருந்தே, இந்த உத்தரவு அமலுக்கு வரவுள்ளது.

சென்னையை சேர்ந்த அருண்குமார் என்பவர், கடந்த 2023ஆம் ஆண்டு வி.ஆர். மாலுக்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம், ஒரு மணி நேரத்திற்கு 50 ரூபாய் என்ற விகிதத்தில் 80 ரூபாய் பர்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அவர் புகார் அளித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com