நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை நீடிக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது.
பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. சென்னையை பொருத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.