செய்தியாளர்: V.M.சுப்பையா
கிருஷ்ணகிரி மாவட்டதைச் சேர்ந்த சேட்டு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் சென்னப்ப நாயக்கனூரில் உள்ள தனது நிலத்தில் தவெக கொடிக் கம்பம் அமைப்பது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், ஊத்தங்கரை தாசில்தாரர் ஆகியோரிடம் விண்ணப்பித்தார்.
இந்நிலையில், அந்த விண்ணப்பத்தின் மீது எந்த வித பதிலும் இல்லை. எனவே தனது சொந்த நிலத்தில் தமிழக வெற்றிக் கழக கொடிக் கம்பத்தை அமைக்க அனுமதி வழங்கும்படி உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரதசக்ரவர்த்தி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாச்சியர், தாசில்தார் ஆகியோர் மனுதாரரின் மனுவை 8 வாரங்களில் பரிசீலிக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்