former cm jagan mohan request for andhra opposition leader status
சந்திரபாபு, ஜெகன் மோகன்எக்ஸ் தளம்

ஆந்திரா | எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க ஜெகன் மோகன் கோரிக்கை!

ஆந்திரா சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க வேண்டுமென ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
Published on

ஆந்திரா சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்த ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த சூழலில், வரும் 24ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவதையொட்டி பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க வேண்டுமென ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

former cm jagan mohan request for andhra opposition leader status
சந்திரபாபு, ஜெகன்மோகன்எக்ஸ் தளம்

ஏற்கனவே, ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், அவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க முடியாது என சபாநாயகர் அய்யனா பத்ருடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது 3 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த பாஜகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டி ஜெகன்மோகன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

former cm jagan mohan request for andhra opposition leader status
அதானி விவகாரம்| ”நடவடிக்கை பாயும்..” - சந்திரபாபுவின் எச்சரிக்கைக்கு ஜெகன்மோகன் பதில்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com