2026 சட்டமன்ற தேர்தல் - உச்ச நீதிமன்றம் web
தமிழ்நாடு

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை நிறுத்திவைக்க வேண்டும்.. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை நிறுத்திவைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Rishan Vengai

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை நிறுத்தவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

2026 சட்டமன்ற 5 மாநில தேர்தல்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்கிறது, வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6ஆம் தேதியாகும், வேட்புமனுவை திரும்பப் பெற ஏப்ரல் 9ஆம் தேதி கடைசி நாளாகும்.

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது, மொத்தம் 824 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படவிருக்கின்றன.

2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி, தவெக, நாம் தமிழர், சசிகலா-ராமதாஸ் கூட்டணி என 5 முனைப் போட்டியாக தமிழக அரசியல் களம் மாறியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026

அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக காத்திருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை நிறுத்திவைக்கவேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமாக இருப்பதால் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.