சென்னை துறைமுகத்தில் நேற்று இரவு கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்த கார் மற்றும் ஓட்டுநரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. கடலில் நீந்தி உயிர் தப்பிய கடலோர காவல்படை அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலோர காவல்படை அதிகாரி ஜொகேந்திர காண்டாவின் தற்காலிக கார் ஓட்டுநராக முகமது ஷாகி செயல்பட்டு வந்தார்.
துறைமுக பகுதியில் இருவரும் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் நேராக கடலில் பாய்ந்தது. கார் கண்ணாடியை உடைத்து ஜொகேந்திர காண்டா வெளியே வந்தார்.
அவரை கடலோர காவல்படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர். இரவு நேரம் என்பதால் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டது.