சென்னை மாநகராட்சியில் தொழில் உரிமம் Pt web
தமிழ்நாடு

தொழில் உரிமம் | வணிகா்களுக்கு சென்னை மாநகராட்சியின் அறிவுறுத்தல் என்ன?

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிகா்கள் தொழில் உரிமத்தை, உரிமக் காலம் முடிவடைவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

PT WEB

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிகா்கள் தொழில் உரிமத்தை, உரிமக் காலம் முடிவடைவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வா்த்தகம் செய்ய, பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி வணிகா்கள் பெருநகர சென்னை மாநகராட்சியிடமிருந்து தொழில் உரிமம் பெற வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட உரிமத்தை, உரிமக் காலம் முடிவடைவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

சென்னை மாநகராட்சி

மேலும், வணிகா்கள் தொழில் உரிமத்தை உரிய கட்டணம் செலுத்தி இணையதள முகவரி மூலமாகவும், சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகம் மூலமாகவும், அனைத்து இ-சேவை மையங்கள் மூலமாகவும் உடனுக்குடன் புதுப்பித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 044-25619305 என்ற தொலைபேசி எண்ணிலும், மின்னஞ்சல் முகவரிகளிலும் தொடா்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது..