டங்ஸ்டன் விவகாரம்: அண்ணாமலை புதிய தலைமுறை
தமிழ்நாடு

“டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக இன்று மகிழ்ச்சியான செய்தி வெளியாகும்” - அண்ணாமலை

டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக இன்று மகிழ்ச்சியான செய்தி வெளியாகும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

PT WEB

டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக இன்று மகிழ்ச்சியான செய்தி வெளியாகும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள நிலையில், சாதகமான முடிவு வரவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

டங்ஸ்டன் விவகாரம்: அண்ணாமலை

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் கனிமத்தை தனியார் நிறுவனம் வெட்டி எடுக்க ஏலம் விடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இச்சூழலில், இத்திட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை டெல்லி சென்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், மேலூர் பகுதியை சார்ந்த ஏழு பேர் கொண்ட குழுவினர் சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இன்று வெளியாகும் அண்ணாமலை தெரிவித்தார். டங்ஸ்டன் திட்டம் தங்கள் பகுதியில் வரக்கூடாது என்றும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மேலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அறிவித்தனர்.