செய்தியாளர்: நாராயணசாமி
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கீழ்விசாரம் பகுதியில் சின்ன கெங்கையம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் நூற்றுக்கணக்கான கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவில் ஒரு பகுதியாக சாமி ஊர்வலம் சென்றபோது பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.
பட்டாசுகள் வெடித்துக் கொண்டிருந்த போது, கோயில் வளாகத்தில் உள்ள அரச மரத்தில் இருந்த தேனீக்கள், எதிர்பாரதவிதமாக பக்தர்களை துரத்தி துரத்தி கொட்டியது. இதில், காயமடைந்த 40க்கும் மேற்பட்ட பக்தர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.