Police stationpt desk
குற்றம்
நாமக்கல் | இட்லி கடை உரிமையாளர் கொலை வழக்கு - தமிழர் தேசம் கட்சி நிர்வாகி உட்பட 6 பேர் கைது
நாமக்கல்லில் இட்லி கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழர் தேசம் கட்சி நிர்வாகி உட்பட 6 பேரை நாமக்கல் காவல் துறையினர் கைது செய்துள்ள்னர்.
செய்தியாளர்: எம் துரைசாமி
நாமக்கல் அடுத்த காவேட்டிப்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீதர் (54) என்பவர் இட்லி கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு நாமக்கல் டிஎஸ்பி அலுவலகம் எதிரே உள்ள பாஸ்ட் ஃபுட் கடையில் இரவு உணவு சாப்பிட வந்த போது ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் நாமக்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
arrestedpt desk
விசாரணையில், பாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளர் ஜோதிமலர் (38), அவரது மகள் நிஷா (23), நிஷாவின் கணவரும் தமிழ் தேசம் கட்சியின் நிர்வாகியுமான மௌலீஸ்வரன் (25), பிலிக்ஸ் (25), கோபிநாத் (30), அரவிந்த் (22) ஆகிய 6 பேரை நாமக்கல் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்