bear
bear pt
தமிழ்நாடு

நீலகிரி பந்தலூரில் தனியார் பங்களாவிற்குள் கதவை உடைத்து புகுந்த கரடியால் பரபரப்பு

யுவபுருஷ்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக வீடுகள் மற்றும் கடைகளை கரடி ஒன்று தொடர்ச்சியாக உடைத்து சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை பந்தலூர் பஜாரை ஒட்டியுள்ள ரிச்மவுண்ட் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டின் பங்களா கதவை உடைத்து உள்ளே நுழைந்து இருக்கிறது. பங்களாவில் மருத்துவர் ஒருவரும் அவரது குடும்பத்தினரும் வசித்து வரும் நிலையில், கரடியை பார்த்து அலறிய அவரது குடும்பத்தினர் உடனடியாக காவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

காவலர் தீப்பந்தத்துடன் பங்களாவுக்குள் புகுந்து கரடியை வேறு வழியாக வெளியே துரத்தினார். இச்சம்பவத்தால் பங்களாவில் குடியிருந்த குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினரும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பங்களவை ஒட்டி கூண்டு வைத்து கண்காணிக்கவும், இரவு நேரத்தில் கூடுதலாக வன பணியாளர்களை இந்த பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பங்களாவில் இரவு நேரத்தில் தீப்பந்தங்களை தயாராக வைக்கவும், கரடி போன்ற மிருகங்கள் வந்தால், தீ பந்தத்தை பற்ற வைத்தால் அவை ஓடிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கரடி வருவது தெரிய வந்தால் உடனடியாக வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது.