Vishnupuram Saravanan x page
தமிழ்நாடு

எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு! எந்த படைப்புக்கு தெரியுமா?

தமிழ் மொழியில் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய ’ஒற்றைச் சிறகு ஓவியா’ என்ற நாவலுக்கு, 2025ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Prakash J

ஆண்டுதோறும் பால சாகித்ய புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, 24 மொழிகளில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதி வெளியான கவிதை, நாவல், நாடகம், கட்டுரை, சிறுகதைகளுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், தமிழ் மொழியில் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய ’ஒற்றைச் சிறகு ஓவியா’ என்ற நாவலுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது விழாவில் எழுத்தாளருக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையுடன் செப்புத் தகடுடன் கூடிய விருது சான்றிதழும் வழங்கப்படும். தமிழில் தொடர்ந்து சிறார் கதைகள், நாவல்கள் எழுதிவரும் விஷ்ணுபுரம் சரவணன், ’கயிறு’, ’நீலப்பூ’ உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

Vishnupuram Saravanan

விருது பெற்றது குறித்து புதிய தலைமுறைக்கு விஷ்ணுபுரம் சரவணன் அளித்த பேட்டியில், ”நூலுக்கு விருது கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி; விருதுகள் படைப்பாளிகளுக்கு உற்சாகத்தை தரக்கூடியது; புத்தகம் மீது வெளிச்சம் கிடைக்கும். புத்தக காட்சிகளில் நிறைய குழந்தைகளை இந்த நூல் போய்ச்சேர்ந்ததில் மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.