ஆம்ஸ்ட்ராங்  pt web
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு| 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து.. அதிரடி உத்தரவு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

PT WEB

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜாமீன் ரத்து செய்யப்பட்டவர்கள் மார்ச் 6 அன்று முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024ஆம் ஆண்டு வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 14 பேருக்கு ஜாமீன் வழங்கி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.  

12 பேருக்கு ஜாமீன் ரத்து!

இந்நிலையில் 14 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதே கோரிக்கையுடன் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியும் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

ஆம்ஸ்ட்ராங்

இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி கே.ராஜசேகர் முன்பு நடைபெற்றது. இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, 12 பேரின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். 

ஜாமீன் ரத்து செய்யப்பட்ட அஸ்வத்தாமன், ஹரிஹரன், பிரதீப் உள்ளிட்டோர் மார்ச் ஆறாம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.