பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவருடைய மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அது, சமீபகால கூட்டங்களிலேயே வெளிப்பட்டது. இதற்கிடையே, அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து, கூட்டணிப் பற்றி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் பாமகவில் எழுந்திருக்கும் கட்சி அதிகார மோதலால், தமிழக அரசியல் களத்தில் சலசலப்பு நிலவுகிறது. இதையடுத்து, தந்தையும் மகனையும் ஒன்றிணைக்கும் பணியில் அக்கட்சியினரே ஈடுபட்டிருக்கும் சூழலில், அவர்களுடன் பிற கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் இணைந்துள்ளனர்.
அந்த வகையில், சமரசப் பேச்சுவார்த்தைக்காக த.வா.க. தலைவர் வேல்முருகன், அதிமுக சைதை துரைசாமி, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஆகியோர் அவர்களுடன் ஆலோசனை நடத்தினர். இதில், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஆலோசனை நடத்தியிருப்பதுதான் பேசுபொருளாகி உள்ளது. அவர், ராமதாஸைச் சந்தித்தது ஏன் என இந்த வீடியோவில் பார்க்கவும்.